பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது லால் சலாம், மோகன் தாஸ், ஆரியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து இவர் தனுஷின் 50வது படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இதற்கிடையில் இவர் பல படங்களையும் தயாரித்து வருகிறார்.
விஷ்ணு விஷால் சமீப காலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ‘ராட்சசன்’ திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் அமலாபால்,அம்மு அபிராமி, காளி வெங்கட், சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கிரைம் திரில்லர் படமான இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது மட்டுமல்லாமல் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. இதைத்தொடர்ந்து இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த படத்தினை இயக்குனர் ராம்குமார் எழுதி இயக்கியிருந்தார்.
இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடிப்பில் முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளது. விஷ்ணு விஷாலின் 21 வது படமான இந்த படம் ராட்சசன் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படம் தொடர்பான மற்ற தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.