விஷ்ணு விஷால் தனது 21 வது படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலாபால் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். இந்த படத்தை இயக்குனர் ராம்குமார் எழுதி இயக்கியிருந்தார். கிரைம் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் பேசப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் விஷ்ணு விஷால். இது சம்பந்தமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற தொடங்கின.
On to the third schedule of #vv21 ..
With the master @dir_ramkumar at work …
Expect the unexpected❤️#kodaikanal#vv21 @SathyaJyothi pic.twitter.com/xQVDXDfxAT— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) February 17, 2024
அதன்படி விஷ்ணு விஷாலின் 21 வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படம் எமோஷனல் ஃபேண்டஸி என்டர்டெய்னர் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படம் சம்பந்தமான லேட்டஸ்ட் அப்டேட்டை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “VV21 படத்தின் மூன்றாம் கட்டப்பட குறிப்பு தொடங்கியது. பணியில் இயக்குனர் ராம்குமார் உடன்” என்று பதிவிட்டுள்ளார். அதே சமயம் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.