Homeசெய்திகள்சினிமாராட்சசன் பட கூட்டணியின் அடுத்த படம்.... படப்பிடிப்பு தொடக்கம்!

ராட்சசன் பட கூட்டணியின் அடுத்த படம்…. படப்பிடிப்பு தொடக்கம்!

-

கடந்த 2014 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் முண்டாசுப்பட்டி. இந்த படத்தை இயக்குனர் ராம்குமார் எழுதி இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து 2018இல் ராம்குமார் இயக்கத்திலும் விஷ்ணு விஷால் நடிப்பிலும் ராட்சசன் திரைப்படம் வெளியானது. சைக்கோ திரில்லர் கதை களத்தில் உருவான இப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

தற்போது விஷ்ணு விஷால் ராம்குமார் இருவரின் கூட்டணி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணைய உள்ளது. இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. ராட்சசன் 2 படத்திற்காக இந்த கூட்டணி இணைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த புதிய படம் காதல் மற்றும் எமோஷனல் கலந்த ஒரு பேண்டஸி படமாக உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விஷ்ணு விஷால் உடன் முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் படங்களில் இணைந்திருந்த முனீஸ் காந்த் மற்றும் காளி வெங்கட் இருவரும் இந்த புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

MUST READ