Homeசெய்திகள்சினிமாபல சிக்கலுக்கு பின் கார்த்தியின் சர்தார் 2வில் இணைந்த ரத்னகுமார்!

பல சிக்கலுக்கு பின் கார்த்தியின் சர்தார் 2வில் இணைந்த ரத்னகுமார்!

-

இயக்குனரும் எழுத்தாளருமான ரத்னகுமார், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் ஆவார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், கைதி மற்றும் லியோ போன்ற திரைப்படங்களுக்கு கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் ரத்னகுமார். அதே சமயம் மேயாத மான், ஆடை, குலு குலு போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். சில தினங்களுக்கு முன்பு இவர் காக்கா – கழுகு சம்பந்தப்பட்ட கதை ஒன்றை கூறி அதன் மூலம் பல சர்ச்சைகளுக்குள் சிக்கினார். ரசிகர்கள் இதனை ரஜினியையும் விஜயையும் ஒப்பிட்டுக் கூறுவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த விஷயத்தால் அப்செட் ஆன லோகேஷ் கனகராஜ், தான் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்கும் படத்தின் பணிகளில் ரத்னகுமாரை ஈடுபடுத்தவில்லை. மேலும் இந்த பிரச்சனைக்குப் பிறகு லோகேஷ் கனகராஜும் ரத்தினகுமாரை விட்டு ஒதுங்கி இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் ரத்னகுமார், லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவிருந்தார். பல சிக்கலுக்கு பின் கார்த்தியின் சர்தார் 2வில் இணைந்த ரத்னகுமார்!நடிகர் லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவரும் ரத்ன குமாருக்கு நோ சொல்லியிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. திரும்பிய பக்கமெல்லாம் இந்த சர்ச்சையால் வசமாக சிக்கிக் கொண்டு முழிக்கிறாராம் ரத்னகுமார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள சர்தார் 2 படத்தில் ரத்தினகுமார் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. சர்தார் 2 படத்தின் வசனம் எழுதும் பணிகளை ரத்தினகுமார் கவனித்துக் கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ