விஷால் நடிப்பில் உருவாகும் ரத்னம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஷால் மூன்றாவது முறையாக ஹரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ரத்னம். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சமுத்திரக்கனி, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படம் ஆக்ஷன் கலந்த மெடிக்கல் மாஃபியா சம்பந்தமான கதை படத்தில் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கு எம் சுகுமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடல் வெளியாகியு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் எதனால எனும் இரண்டாவது பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் விஷால் மற்றும் பிரியா பவானி சங்கருக்கு இடையேயான மெலோடி பாடலாக வெளிவந்துள்ளது. இந்த பாடலை சிந்துரி விஷால் பாடியுள்ள நிலையில் பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ஏப்ரல் 26 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.