Homeசெய்திகள்சினிமாகார் மோதி பெண்கள் காயம்... பிரபல நடிகையை தாக்க முயற்சி...

கார் மோதி பெண்கள் காயம்… பிரபல நடிகையை தாக்க முயற்சி…

-

- Advertisement -
மும்பையில் சாலையை கடக்க முயன்ற பெண்கள் மீது பிரபல பாலிவுட் நடிகையின் கார் மோதிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரவீணா தண்டன். இவர் கன்னடத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் இவர் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில், மும்பையில் பார்ட்டி ஒன்றுக்கு சென்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார் நடிகை ரவீணா. மும்பை சாலையில் அவரது கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையை கடக்க முயற்சி செய்த 3 பெண்கள் மீது கார் மோதியது.

உடனே காரை விட்டு கீழே இறங்கி வந்த ஓட்டுநர், சாலையை கடக்க முயன்ற பெண்களுடன் தகராறு செய்தார். அதோடு அவர்களை பிடித்து தள்ளியதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், காரிலிருந்து இறங்கி வந்த நடிகை ரவீணாவும், பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவத்தை அறிந்த உள்ளூர் மக்கள் உடனடியாக திரண்டு வந்தனர். சம்பவத்தை அறிந்த மக்கள், அங்கு பிரச்சனை செய்த நடிகை ரவீணாவை கோபத்தில் தாக்க முயற்சித்துள்ளனர்.

https://x.com/i/status/1797206924230095137

உடனே தன்னை அடிக்க வேண்டாம் என்று மக்களிடம் நடிகை ரவீணா கெஞ்சியிருக்கிறார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த ஒருவர் காவலர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். விரைந்து வந்த போலீசார் பிரச்சனையை சுமூகமாக பேசி நடிகையை அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கார் மோதியதில் பெண் ஒருவரின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக நடிகை மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்திருக்கின்றனர்.

MUST READ