Homeசெய்திகள்சினிமா'காதலிக்க நேரமில்லை' படத்தை தொடர்ந்து அடுத்த ரிலீஸுக்கு தயாராகும் ரவி மோகன்!

‘காதலிக்க நேரமில்லை’ படத்தை தொடர்ந்து அடுத்த ரிலீஸுக்கு தயாராகும் ரவி மோகன்!

-

- Advertisement -

ஆரம்பத்தில் ஜெயம் ரவி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் ரவி. சமீபத்தில் இவர் தனது பெயரை மாற்றியதாகவும் இனி தன்னை ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 'காதலிக்க நேரமில்லை' படத்தை தொடர்ந்து அடுத்த ரிலீஸுக்கு தயாராகும் ரவி மோகன்!இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் சமீபத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரவியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதே சமயம் ரவி மோகன், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் JR 34 போன்ற படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில் இவர், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஜீனி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரவியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், கிரித்தி ஷெட்டி, வாமிகா கேபி, தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.'காதலிக்க நேரமில்லை' படத்தை தொடர்ந்து அடுத்த ரிலீஸுக்கு தயாராகும் ரவி மோகன்! பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் 2025 கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ