Homeசெய்திகள்சினிமாகருப்பு நிறத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளேன் - சுந்தரி

கருப்பு நிறத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளேன் – சுந்தரி

-

- Advertisement -

கருப்பு நிறத்தால் அநேக இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளேன் சுந்தரி நாடகத்தின் நாயகி கேப்ரில்லா வேதனை!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மார்க் ஸ்டூடியோவில் ‘N4’ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர் அதில் மைக்கேல், கேப்ரில்லா(சுந்தரி), வினுஷா இயக்குனர் லோகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பேசிய படக்குழுவினர், N4 என்ற சிறிய படத்திற்கு ஊடகம் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி. நல்ல படங்களை சரியான இடத்திற்கு கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.

N4 என்ற காவல்துறைக்கு உடப்பட பகுதியில் நடைபெறும் கதை தான் இந்த படம், சிறிய படமாக இருந்ததால் தான் எங்களால் படத்தை இயல்பாக எடுக்க முடிந்தது என இயக்குனர் லோகேஷ் தெரிவித்தார்.

வெள்ளை நிறத்தில் இல்லாத நாயகியை தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு கதையின் இயல்பு இது தான், இந்த நிறம் கதையின் களத்தை பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்டது என்றார்.

சுந்தரி நாடகத்தில் நாயகியாக நடித்து வரும் கேப்ரில்லா(சுந்தரி) பேசுகையில், நான் சந்தித்த வரையில் என்னுடைய நிறத்தால் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளேன் இந்த நிறத்தில் உள்ள என்னை நாயகியாக நடிக்க வைத்த இயக்குனருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

MUST READ