ரெட்ரோ படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ரெட்ரோ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை 2D நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்து இருக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கேங்ஸ்டர் கலந்த காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
New Single coming soooooon 🚀🚀💥💥💥. #Retro pic.twitter.com/fBLc0rUbsZ
— Santhosh Narayanan (@Music_Santhosh) April 9, 2025
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் கனிமா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பாடலாக அமைந்து இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ரெட்ரோ படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.