டோலிவுட்டில் புதிய நட்சத்திர தம்பதிகளாக புது வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் வருண் தேஜ் மற்றும் லாவண்யா தம்பதி இந்தாண்டு கடந்து வந்த பாதையை வீடியோவாக பகிர்ந்துள்ளனர்.
தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லாவண்யா. தொடர்ந்து, ‘மாயவன்’ என்ற படத்தில் நடித்தார். தெலுங்கில் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர். இருவரும் ‘அந்தாரிக்ஷம்’ என்ற படத்தில் நடித்த போது காதலிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் நிச்சயதார்த்தம் நடந்தது.
Rewinding the clock to #VarunLav's memorable moments in 2023 💖✨
From sweet glances to shared laughter, 2023 was a year of beautiful memories for this adorable couple. Here's to the magic they created together 💑 #VarunTej #LavanyaTripathi #HappyNewYear pic.twitter.com/HLCrNTxIyF
— Social News XYZ (@Social_News_XYZ) January 1, 2024