ஏ ஆர் ரஹ்மான் திரைத்துறையில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும் வலம் வருபவர். இவருடைய இசைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் இவர் தனது இசை திறமையை வெளிக்காட்டி பல்வேறு விருதுகளை அள்ளி இருக்கிறார். அந்த வகையில் பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரஹ்மான். கடைசியாக ஏ ஆர் ரஹ்மான் இசையில் பிரித்விராஜன் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியான நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இசை ரசிகர்களின் மனதை வென்றது. அதைத்தொடர்ந்து அடுத்ததாக வெளியாக இருக்கும் ராயன் திரைப்படத்திற்கும் ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். மேலும் தக் லைஃப் போன்ற படங்களுக்கு இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான். இது ஒரு பக்கம் இருக்க நாளை ஏப்ரல் 19 தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திரை பிரபலங்கள் பலரும் நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
The right to vote is one of the most important duties of being a citizen! This 2024 Lok Sabha election will see a record number of youth that are eligible to vote. Therefore, I urge all people and especially the youth to get their voter ids and join in the process of celebrating… pic.twitter.com/HhJjeOwSVN
— A.R.Rahman (@arrahman) April 18, 2024
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில், “வாக்களிக்கும் உரிமை ஒரு குடிமகனின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். இளைஞர்கள் அனைவரும் இந்த 2024 லோக்சபா தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு உலகம் கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக விழாவை கொண்டாடும் பணியில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.