ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் ரியோ ராஜ், சிவகார்த்திகேயன் மற்றும் கவின் ஆகியோரை போல் சின்னத்திரையில் பிரபலமாகி அதன் பின்னர் ஹீரோவாக உருவெடுத்தவர். அதன்படி இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களில் நடித்த இவர், கடந்த ஆண்டு வெளியான ஜோ என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. அதைத்தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக கமிட் ஆகி நடித்த வருகிறார் ரியோ ராஜ். அதன்படி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவாகும் ஸ்வீட் ஹார்ட் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியிருக்கிறார். ஜெகன் ராஜ்வேல் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ரியோ ராஜுடன் இணைந்து கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் தலைப்பையும் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் நேற்று (நவம்பர் 27) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.