Homeசெய்திகள்சினிமாரியோ ராஜ் நடிப்பில் வெளியான 'ஸ்வீட் ஹார்ட்'.... ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்வீட் ஹார்ட்’…. ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

-

- Advertisement -

ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஸ்வீட் ஹார்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ரியோ ராஜ் நடிப்பில் வெளியான 'ஸ்வீட் ஹார்ட்'.... ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!

ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்த ரியோ ராஜ் தமிழ் சினிமாவில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் ரியோ ராஜுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியான ஜோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் இவர் ‘ஆண்பாவம் பொல்லாதது’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் ஸ்வீட் ஹார்ட் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பிலும் இசையிலும் உருவாகி இருந்த இந்த படத்தை ஸ்வினீத் எஸ். குமார் இயக்கியிருந்தார். இதில் ரியோ ராஜுடன் இணைந்து கோபிகா ரமேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரியோ ராஜ் நடிப்பில் வெளியான 'ஸ்வீட் ஹார்ட்'.... ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!ரொமான்டிக் காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த மார்ச் 14ஆம் தேதி திரைக்கு வந்தது. வெளியான முதல் நாளில் இருந்தே ஓரளவிற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வந்த இப்படம் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ