Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்த படங்களில் நடிக்கும் ரியோ ராஜ்..... முடிவுக்கு வந்த படப்பிடிப்பு!

அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் ரியோ ராஜ்….. முடிவுக்கு வந்த படப்பிடிப்பு!

-

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரியோ ராஜ். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக காலடி எடுத்து வைத்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தில் நடித்தார்.அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் ரியோ ராஜ்..... முடிவுக்கு வந்த படப்பிடிப்பு! இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் நடித்திருந்த ஜோ திரைப்படமும் இதற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதுமட்டுமில்லாமல் ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஸ்வினீத் இயக்கிய புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் ரியோ ராஜ்..... முடிவுக்கு வந்த படப்பிடிப்பு!கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் ரியோ ராஜ் மேலும் ஒரு புதிய படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க கலையரசன் தங்கவேல் இந்த படத்தை இயக்குகிறார். ஏற்கனவே ரியராஜுடன் இண்டிந்து ஜோ படத்தில் நடித்திருந்த மாளவிகா மனோஜ் இந்த படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக  நடித்துள்ளார். சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் ரியோ ராஜ்..... முடிவுக்கு வந்த படப்பிடிப்பு!கடந்த மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ