ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில், பாகுபலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். பாகுபலி படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடித்த சாஹோ, ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சலார். இத்திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
சலார் திரைப்படத்தை அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே கல்கி 2898 ஏடி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடித்திருக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
KALKI X KANTARA 🔥@shetty_rishab gets his hands on #Bujji.#Kalki2898AD pic.twitter.com/IvIHuxGO6y
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) June 24, 2024