Homeசெய்திகள்சினிமாரிஷப் ஷெட்டி நடிக்கும் 'சத்ரபதி சிவாஜி மகாராஜ்' .... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ …. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

ரிஷப் ஷெட்டி நடிக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.ரிஷப் ஷெட்டி நடிக்கும் 'சத்ரபதி சிவாஜி மகாராஜ்' .... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!கன்னட சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் காந்தாரா எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படமானது அதல பாதாளத்தில் இருந்த கன்னட சினிமாவை தூக்கி நிறுத்தியது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரிஷப் ஷெட்டியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரிஷப் ஷெட்டி காந்தாரா 2 படத்தை இயக்கி வருகிறார். மேலும் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய் ஹனுமான் திரைப்படத்தில் ஹனுமானாக நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஜெய் ஹனுமான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது.ரிஷப் ஷெட்டி நடிக்கும் 'சத்ரபதி சிவாஜி மகாராஜ்' .... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! இந்நிலையில் ரிஷப் ஷெட்டி நடிக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படம் சத்ரபதி சிவாஜியின் பயோபிக் படமாகும். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தினை சந்தீப் சிங் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் இப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ