Homeசெய்திகள்சினிமாசினிமாவும், விளையாட்டும் இரண்டு கண்கள் - ரித்திகா சிங்

சினிமாவும், விளையாட்டும் இரண்டு கண்கள் – ரித்திகா சிங்

-

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் ரித்திகா சிங். இவர் தற்போது முன்னணி இயக்குநராக உள்ள சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று படத்தின் மூலம் நாயகியாக திரைத்துறையில் அறிமுகமானவர். அத்திரைப்படத்தில் மாதவனுடன் சேர்ந்து நடித்திருப்பார். நிஜ வாழ்விலும் குத்துச்சண்டை போட்டியாளரான ரித்திகா, அப்படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருப்பார். தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த ரித்திகா சிங், அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸூடன் சிவலிங்கா, படத்தில் நடித்தார். அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்திருந்த ஓ மை கடவுளே திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தில் , ரித்திகாவின் நடிப்பு மீண்டும் பெரிதளவில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் கொலை என்ற படத்தில் காவல் அதிகாரியாக ரித்திகா நடித்திருந்தார். தற்போது துல்கர் சல்மானுடன் கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு உள்ளிட்ட மொழியிலும் ரித்திகா ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய ரித்திகா சிங், சினிமாவில் நடித்தாலும் ஒருபோதும் விளையாட்டை விட மாட்டேன் என தெரிவித்துள்ளார். நடிப்பில் தீவிரமாக பணியாற்றி வந்தாலும், விளையாட்டை என்னால் கைவிட முடியாது. அது எனது ரத்தத்தில் கலந்தது. சினிமாவும், விளையாட்டும் இல்லாமல் யோசிக்கக்கூட முடியாது. நாட்டுக்காக தொடர்ந்து விளையாடுவேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

MUST READ