Homeசெய்திகள்சினிமாஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சொர்க்கவாசல்... வெளியானது அடுத்த பட அறிவிப்பு....

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சொர்க்கவாசல்… வெளியானது அடுத்த பட அறிவிப்பு….

-

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆர்ஜே பாலாஜி. வெறும் குரல் வழியாக தமிழகத்தில் பல கோடி மக்களின் மனதை வென்று, பின்னர் திரையில் தோன்றியவர் ஆர்ஜே பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். இவருடைய ரேடியோ வர்ணனைக்கும், கிரிக்கெட் கமெண்ட்ரிக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நானும் ரவுடிதான், காற்று வௌியிடை, இது என்ன மாயம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

நடிப்பு மட்டுமன்றி இயக்கத்திலும் அவருக்கு அதீத ஆர்வம் உண்டு. எல்கேஜி படத்தை அவரே இயக்கி நடித்தார். அதில் நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அதே போல, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். அடுத்து ரன் பேபி ரன் மற்றும் இந்தி ரீமேக் படமான வீட்ல விஷேசன் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வௌியீட்டுக்கு தயாராகி உள்ள படம் சிங்கப்பூர் சலூன். இத்திரைப்படம் வரும் 25-ம் தேதி வௌியாக உள்ளது. இதையடுத்து, ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் சொர்ககவாசல். ஸ்ரீதர் விஷ்வநாத் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் வௌியாக இருக்கிறது. மேலும், படத்தின் வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தின் முதல் தோற்றத்தையும் பகிர்ந்துள்ளது.

MUST READ