Homeசெய்திகள்சினிமாதனுஷ் - நயன்தாரா விவகாரம் குறித்து ஆர்.ஜே. பாலாஜியின் பதில் என்ன?

தனுஷ் – நயன்தாரா விவகாரம் குறித்து ஆர்.ஜே. பாலாஜியின் பதில் என்ன?

-

கடந்த சில தினங்களாக பல ஊடகங்களிலும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் வரும் விவகாரம் என்றால் அது தனுஷ் – நயன்தாரா விவகாரம் தான். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் மிக நீளமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.தனுஷ் - நயன்தாரா விவகாரம் குறித்து ஆர்.ஜே. பாலாஜியின் பதில் என்ன? இந்த அறிக்கை தான் தனுஷ் – நயன்தாரா பிரச்சனை மிகப்பெரிய அளவில் தலை தூக்க ஆரம்ப புள்ளியாக இருந்தது என்று சொல்லலாம். அதன் பிறகு தான் பிரச்சனை பெரிதாக மாறியது. அதாவது நடிகர் தனுஷின் தயாரிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரெளடி தான் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் போது தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் காதல் மலர்ந்த நிலையில் சமீபத்தில் வெளியான இவர்களின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் படத்தின் காட்சிகளை இணைக்க தனுஷிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் தனுஷ் அதற்கு இதுவரை அனுமதி வழங்காததால் அந்த காட்சிகள் இல்லாமலேயே ஆவணப்படம் வெளியாக போவதாகவும் வருத்தம் தெரிவித்த நயன்தாரா தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தார். இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனுஷுடன் இணைந்து நடித்த பல முன்னணி நடிகைகள் நயன்தாராவிற்கு ஆதரவுக்குரல் கொடுத்தது போன்ற விஷயங்களால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது.தனுஷ் - நயன்தாரா விவகாரம் குறித்து ஆர்.ஜே. பாலாஜியின் பதில் என்ன? எனவே தனுஷ்- நயன்தாரா விவகாரம் குறித்து ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஆர் ஜே பாலாஜியிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நானும் அந்த தகவலை இணையத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கும் கொண்டாட்டம், கூத்தாடி இரண்டு பட்டால் ஊருக்கும் கொண்டாட்டம் என்பது போல் ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் அதைப் பார்த்து அதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். இதில் கருத்து தெரிவிக்க ஒன்றுமில்லை. நடிகர் தனுஷே அதற்கு பதில் அளிக்கவில்லை எனும்போது நான் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது. நான் இல்லை, வேறு யாருமே அதற்கு கருத்து சொல்ல அவசியம் இல்லை. நயன்தாரா – தனுஷ் ஆகிய இருவருமே அதைப் பற்றி பேசிக்கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆர்.ஜே பாலாஜி, நானும் ரெளடி தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ