Homeசெய்திகள்சினிமாபாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வரும் 'சொர்க்கவாசல்'.... நெகிழ்ச்சியடைந்த ஆர்.ஜே. பாலாஜி!

பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வரும் ‘சொர்க்கவாசல்’…. நெகிழ்ச்சியடைந்த ஆர்.ஜே. பாலாஜி!

-

சொர்க்கவாசல் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் சொர்க்கவாசல். இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன், சானியா ஐயப்பன், கருணாஸ், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வரும் 'சொர்க்கவாசல்'.... நெகிழ்ச்சியடைந்த ஆர்.ஜே. பாலாஜி! இந்த படத்தினை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரிக்க சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கியிருந்தார். கிறிஸ்டோ சேவியர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். பிரின்ஸ் அண்ட்சன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படமானது முழுக்க முழுக்க ஜெயிலில் நடக்கும் திரில்லர் கதைக்களம் ஆகும். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து சொர்க்கவாசல் படத்தில் எழுத்தாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் உடன் இருந்தார். அப்போது பேசிய ஆர் ஜே பாலாஜி, “நானும் அஸ்வினும் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதனால் தியேட்டர் தியேட்டராக சென்று சொர்க்கவாசல் படத்தை ப்ரோமோட் செய்ய முடியவில்லை. ஆனால் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னைவிட அஸ்வினுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் அவருடைய முதல் படம். அடுத்தது என்னுடைய நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. அது எனக்கு பெருமையாக இருக்கிறது. புயல் இருந்தாலும் மற்ற மாவட்டங்களிலும் சொர்க்கவாசல் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நல்ல படங்களை எப்போதும் நீங்கள் வாழ வைப்பீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ