ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர் ஜே பாலாஜி LKG, மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேஷம், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றார். அதைத் தொடர்ந்து
சிங்கப்பூர் சலூன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கியிருந்தார். இதில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், ரோபோ சங்கர், லால், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அரவிந்த்சாமி, ஜீவா ஆகியோர் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். எம் சுகுமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய விவேக் – மெர்வின் இசை அமைத்திருந்தார். மேலும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி டென்ட் கொட்டா என்ற ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.