Homeசெய்திகள்சினிமாஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன்... புதிய போஸ்டர் வெளியீடு...

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன்… புதிய போஸ்டர் வெளியீடு…

-

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து வரும் கதாநாயகனாக உருவெடுத்துள்ளவர் ஆர். ஜே.பாலாஜி. இவருடைய ரேடியோ வர்ணனைக்கும், கிரிக்கெட் கமெண்ட்ரிக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் “நானும் ரவுடிதான்” ,கார்த்தி- மணிரத்தினம் கூட்டணியில் வெளியான “காற்று வெளியிடை” போன்ற படங்களில் ஹீரோவின் நண்பராக நடித்து வந்தார். பின்னர் எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோவாக கோலிவுட் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

அரசியல் நகைச்சுவை பின்னணியில் உருவான இப்படம் நல்ல வெற்றியை பெற்று தந்தது . அதன் பின்னர் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தை இயக்கவும் செய்தார். தொடர்ந்து வீட்டுல விசேஷம், ரன் பேபி ரன் போன்ற படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படங்களாகவே அமைந்தன.
இதைத் தொடர்ந்து, ஆர் ஜே பாலாஜி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா படங்களை இயக்கிய இயக்குனரான கோகுல் இயக்கத்தில் “சிங்கப்பூர் சலூன்” என்னும் படத்தில் நடித்துள்ளார்.சலூனில் முடி திருத்தும் கலைஞராக இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்துள்ளார்.ஷிவானி நாராயணன் கதாநாயகியாகவும் சத்யராஜ், லால் ,ரோபோ சங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் சலூன் படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

MUST READ