ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை – 2 பேரை விசாரிக்க அனுமதி
நடிகர் ரஜினிகாந்தின் மகள் வீட்டில் கோடிக்கணக்கில் நகைகள் கொள்ளையடித்த விவகாரத்தில் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வீட்டின் பணியாளர் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேசன் ஆகியோரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 100 சவரன் நகைகள், 30கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1கோடி மதிப்புள்ள நிலத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் வீட்டில் எவ்வளவு நகைகள் காணாமல் போனது என ஐஸ்வர்யாவிற்கு தெரியாத நிலையில், எவ்வளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் பணியாளர் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை தேனாம்பேட்டை போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனு மீதான விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்ற 18வது எம்.எம் மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெறுவதால் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை போலீசார் ஆஜர்படுத்தி உள்ளனர்.
3 நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் இரண்டு நாட்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.