கரண் ஜோகர், ரன்வீர் சிங் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரை உலகில் முக்கிய இயக்குனரான கரண் ஜோகர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஏ தில் பை முஸ்கில்’ திரைப்படத்திற்குப் பிறகு 6 வருடங்கள் கழித்து தற்போது ஒரு புதிய படத்தை தயாரித்து இயக்குகிறார்.
‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் இவர்களுடன் தர்மேந்திரா, ஷபானா ஆஸ்மி, ஜெயா பச்சன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
காதல் மற்றும் காதல் உறவினால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். சென்டிமென்ட் கலந்த காதல் கதையில் உருவாக்கப்பட்ட இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
- Advertisement -