Homeசெய்திகள்சினிமாதக் லைஃப் படத்தில் இணையும் இளம் பாலிவுட் நடிகர்

தக் லைஃப் படத்தில் இணையும் இளம் பாலிவுட் நடிகர்

-

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில், பிரபல இளம் இந்தி நடிகர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 முன்னணி இயக்குநராக மட்டுமன்றி அனைவரின் விருப்ப இயக்குராகவும் வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவர் பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு தற்போது தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கிறார். கிட்டத்தட்ட நாயகன் படத்திற்கு பிறகு இந்த மெகா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனமும் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் கமலுடன் சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர்கள், அலி ஃபஸல், பங்கஜ் திரிபாதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் மற்றொரு பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் முன்னணி இளம் நடிகராக வலம் வரும் ரோஹித் ஷரஃப் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும், ஏற்கனவே படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர், மிஸ் மேட்சுடு என்ற இணைய தொடரில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர். தமிழில் கயல் ஆனந்தி நடித்த கமலி ஃப்ரம் நடுக்காவேரி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், விக்ரம் வேதா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

MUST READ