Homeசெய்திகள்சினிமாவிழாக்கோலம் பூண்ட திரையரங்குகள்... தமிழக, கேரள ரசிகர்கள் உற்சாகம்...

விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள்… தமிழக, கேரள ரசிகர்கள் உற்சாகம்…

-

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இன்று ஒரே நாளில் திரையரங்குகளில் ஏராளமான திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன.

விஜய் ஆண்டனி முதல் முறையாக ரொமேண்டிக் வேடத்தில் நடித்திருக்கும் ரோமியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் மிர்ணாலினி ரவி ஜோடியாக நடித்திருக்கிறார். விநாயகர் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதேபோல, ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ் இணைந்து நடித்திருக்கும் டியர் திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார்.

காளி வெங்கட், ரோகிணி, தலைவாசல் விஜய், பிளாக் ஷீப் நந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார். தமிழில் கார்த்தி மற்றும் தமன்னா நடித்த பையா திரைப்படமும் மறுவெளியீடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல, மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஆவேஷம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ரோமாஞ்சம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஃபகத் பாசில், நஸ்ரியா நாசிம், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் திரைக்கு வந்துள்ள மற்றொரு திரைப்படம் தான் வருஷங்களுக்கு ஷேஷம். ஹிருதயம் கூட்டணியில் உருவான மற்றொரு புதியபடம் இதுவாகும். இதில், பிரணவ் மோகன்லால் நாயகனாக நடிக்க, கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்திருக்கிறார். நிவின்பாலி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் என இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக பல படங்கள் திரைக்கு வந்துள்ளன.

MUST READ