Homeசெய்திகள்சினிமாஆஸ்கர் விழாவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்... மீண்டும் படத்திற்கு கிடைத்த கௌரவம்...

ஆஸ்கர் விழாவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்… மீண்டும் படத்திற்கு கிடைத்த கௌரவம்…

-

தெலுங்கில் வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் பிரம்மாண்ட படைப்பு ஆர்.ஆர்.ஆர். திரைப்படம். மெகா ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனையும் செய்தது.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், நடிகை ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். 95-வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது வென்றது. அதேபோல, கோல்டன் குளோப் விருதையும், வென்றது.

இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சில முக்கிய திரைப்படங்களின் ஸ்டன்ட் காட்சிகள் அடங்கிய வீடியோ மான்டேஜ் ஒன்றை ஆஸ்கர் விருது குழு வெளியிட்டது. அதில், ஆர்.ஆர்.ஆர். படத்தின் சண்டைக் காட்சிகளும், நடனக் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள, ஆர்.ஆர்.ஆர். படக்குழு, மீண்டும் எங்களுக்கு ஒரு இனிமையான ஆச்சரியம் என்று தெரிவித்துள்ளனர்.

MUST READ