Homeசெய்திகள்சினிமாநடிகை த்ரிஷா விவகாரம்... மன்சூர் அலிகானுக்கு விதித்த உத்தரவு ரத்து...

நடிகை த்ரிஷா விவகாரம்… மன்சூர் அலிகானுக்கு விதித்த உத்தரவு ரத்து…

-

- Advertisement -
நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில், மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதம் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு வைரலாகி பெரும் அதிவலையை ஏற்படுத்தியது. த்ரிஷா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து டிஜேபிக்கு மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதன்படி, மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு த்ரிஷாவும் மன்னித்தார். இருப்பினும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி நடிகை த்ரிஷா, சிரஞ்சீவி, குஷ்பு ஆகியோர் மீது தலா ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடுகோரி மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபதி செய்து உத்தரவிட்டார். அத்துடன் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

இதையடுத்து தனி நீதிபதி உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, அபராத தொகையை ரத்து செய்தனர். மேலும், நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

MUST READ