சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா… கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு….
தலைநகர் சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை தொழில், வர்த்தகம், சுற்றுலாத்தலங்களுக்கு மட்டுமின்றி சினிமாவுக்கும் ஒரு மூலதனமான நகரமாகும். கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் இன்று உள்ள சினிமா துறைக்கு முன்னோடியாகவும், சினிமா துறை வளரவும் முக்கிய காரணமாக இருந்த நகரம் சென்னை. ஊள்ளூர் சினிமா விழாக்களும், மாநில அளவிலான சினிமா நிகழ்ச்சிகள் மட்டுமன்றி தற்போது தலைநகர் சென்னையில் சர்வதசே அளவில் திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் வரும் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி மற்றும் 3-ம் தேதி திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த 2 நாள் விழாவில் ஆங்கில சப் டைட்டில்களுடன் படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி மாலை விளாடிவஓஸ்டோக் என்ற திரைப்படம் திரையிட தேர்வாகி உள்ளது. ஆன்டன் பார்மடோவ் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
அதேபோ பிப்ரவரி 3-ம் தேதி கித்ரோவ்கா – தி சைன் ஆஃப் ஃபோர் என்ற படம் திரையிடப்படுகிறது. மாலை 5 மணிக்கு இத்திரைப்படம் திரையிடப் பட உள்ளது. இந்த ரஷ்ய திரைப்பட விழாவிற்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.