Homeசெய்திகள்சினிமாதள்ளிப் போகும் அசோக் செல்வனின் சபாநாயகன்.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தள்ளிப் போகும் அசோக் செல்வனின் சபாநாயகன்…. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

தள்ளிப் போகும் அசோக் செல்வனின் சபாநாயகன்.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!சூது கவ்வும், ஓ மை கடவுளே, தெகிடி போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து அசோக் செல்வன் நடித்திருந்த போர் தொழில் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. நடிகர் அசோக் செல்வன் நல்ல கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடியவர். அந்த வகையில் தற்போது சி. எஸ். கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ள சபாநாயகன் திரைப்படத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அசோக்செல்வனுடன் இணைந்து மேகா ஆகாஷ், சாந்தினி சௌத்ரி, கார்த்திகா முரளிதரன், மைக்கேல் தங்கதுரை, அருண்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். கிளியர் வாட்டர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து பிரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ப்ரோமோஷன் பணிகளில் தாமதம் ஏற்படுவதால் சபாநாயகன் திரைப்படமானது வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.

MUST READ