சாய் அபியங்கர், அல்லு அர்ஜுனின் புதிய படத்திற்கு இசையமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2000 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமான பாடகர்களாக வலம் வந்தவர்கள் திப்பு மற்றும் ஹரினி. இவர்களுடைய மகன்தான் சாய் அபியங்கர். இவர், ஆரம்பத்தில் ஆச கூட, கட்சி சேர ஆகிய ஆல்பம் பாடல்களை பாடி, இசையமைத்து ஓவர் நைட்டில் புகழ்பெற்றவர். அடுத்தது மூன்றாவதாக இவர் சித்திர புத்திரி எனும் பாடலையும் பாடி, நடித்து, இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இவ்வாறு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சாய் அபியங்கர். இவர் தொடர்ந்து பல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் சூர்யா 45 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ராகவா லாரன்ஸ்-ன் பென்ஸ் படத்திலும் மலையாள படம் ஒன்றிலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இவரைப் பற்றிய கூடுதல் தகவல் என்னவென்றால், அல்லு அர்ஜுனின் புதிய படத்திலும் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளாராம் சாய் அபியங்கர். அதாவது நடிகர் விஜயின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் தான் சாய் அபியங்கர் இசையமைக்கப் போகிறாராம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
மேலும் ஏற்கனவே ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லீ இயக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசை அமைக்க போகிறார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.