சாய் பல்லவியும் நானும் இணைந்து நடனம் ஆட மாட்டோம் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. நடிகை சாய் பல்லவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் எப்போது தொடங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது படம் குறித்த அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து சிவகார்த்திகேயன் கொண்டார். அதே நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவியும் கலந்து கொண்டார். அப்போது சாய் பல்லவியுடனான படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, தனது அடுத்த படத்தில் சாய் பல்லவி தான் கதாநாயகி என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் அவர்கள் இருவரும் இணைந்து படத்தில் ஒரு பாடலுக்கு கூட நடனம் ஆடவில்லை என்றும் தெரிவித்தார்.
இருவரும் அருமையான டான்சர்ஸ். அப்படி இருக்க இருவரும் இணைந்து நடனமாடினால் தியேட்டரே திருவிழா தான். ஆனால் சிவகார்த்திகேயனின் இந்த பதில் ரசிகர்களை கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளது.