Homeசெய்திகள்சினிமாரகசிய திருமணம் குறித்த வதந்திக்கு பதிலடி கொடுத்த சாய் பல்லவி!

ரகசிய திருமணம் குறித்த வதந்திக்கு பதிலடி கொடுத்த சாய் பல்லவி!

-

- Advertisement -

மலையாளத் திரை உலகில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் கரு, மாரி 2, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் SK 21 படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நாக சைதன்யாவிற்கு ஜோடியாக NC23 படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சாய்பல்லவிக்கும் SK21 பட இயக்குனர் ராஜ்குமாருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக சில வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதாவது SK 21 படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்து இவ்வாறான தவறான தகவல்களை பரப்பி உள்ளனர்.

இது தொடர்பாக நடிகை சாய் பல்லவி தனது சமூக வலைதள பக்கத்தில், ” நான் வதந்திகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. குடும்பமாக இருக்கும் நண்பர்களையும் இது உள்ளடக்கி இருப்பதால் நான் பேச வேண்டி உள்ளது. படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடிட் செய்து இது போன்ற கேவலமான செயல்களை செய்து வருகிறார்கள். எனது படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது இது போன்ற வேலையின்மை செயல்களுக்கு விளக்கம் அளிப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்துவது முற்றிலும் கேவலமானது” என்று பதிவிட்டு திருமணம் குறித்த வதந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

MUST READ