Homeசெய்திகள்சினிமாதளபதி விஜயின் டான்ஸ் எனக்கு பிடிக்கும்..... சாய் பல்லவி பேச்சு!

தளபதி விஜயின் டான்ஸ் எனக்கு பிடிக்கும்….. சாய் பல்லவி பேச்சு!

-

- Advertisement -

நடிகை சாய் பல்லவி தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தளபதி விஜயின் டான்ஸ் எனக்கு பிடிக்கும்..... சாய் பல்லவி பேச்சு!மேலும் இவர் வெறித்தனமாக ஆட்டம் போட்டு லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். அந்த வகையில் இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கேரள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார். அதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பெயர் பெற்றார். அடுத்தது ராமாயணா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் சாய் பல்லவி. மேலும் இவர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி இருக்கும் தண்டேல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 7 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இது தொடர்பான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.தளபதி விஜயின் டான்ஸ் எனக்கு பிடிக்கும்..... சாய் பல்லவி பேச்சு! இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய சாய் பல்லவி, தளபதி விஜய் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “டான்ஸில் தளபதி விஜய் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவருடைய நடனம் எனக்கு பிடிக்கும். அதிலும் அவரும் சிம்ரன் மேடமும் நடனம் ஆடுவது எனக்கு பிடிக்கும். விஜய் சாரின் டான்ஸ் பார்க்கும்போது எனக்கும் ஆடனும் போல இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ