Homeசெய்திகள்சினிமாசைஃப் அலிகான் தாக்குதல்… அதிகாலையில் நடந்தது என்ன..? குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்..!

சைஃப் அலிகான் தாக்குதல்… அதிகாலையில் நடந்தது என்ன..? குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்..!

-

- Advertisement -
kadalkanni

புறாவின் எச்சங்கள் மட்டும் இல்லையென்றால், சைஃப் அலி கானைத் தாக்கியவன் தன் திட்டத்தில் வெற்றி பெற்றிருப்பான் எனத் தகவல் வெளியாகி இருகிறது.

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.வியாழக்கிழமை அதிகாலையில் சைஃப் அலிகான் தாக்கப்பட்டார்.வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவத்தில் சைஃப் காயமடைந்தார். அவர் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றம் சாட்டப்பட்ட ஷரிபுல், சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு, அதே கட்டிடத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைய முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். தாக்குவதற்கு முன்பு குற்றவாளி சைஃப் அலிகான் வீட்டை நோட்ட்மிட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜனவரி 15 ஆம் தேதி இரவு தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டார். பாந்த்ரா மற்றும் கர் வழியாக, ஜனவரி 16 அன்று சத்குரு ஷரன் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்தார். அங்கு சைஃப் அலி கான் கரீனா கபூர் கான் மற்றும் குடும்பத்தினருடன் வசிக்கிறார்.

சிசிடிவி கேமராக்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, ஷரிபுல் கார்களின் பின்னால் மறைந்து கடந்து இறுதியாக சைஃப் அலிகானின் கட்டிடத்தை அடைந்தார். அந்த கட்டடம் மிகவும் ஆடம்பரமாக இருந்ததால் உள் நுழைய திட்டமிட்டுள்ளார். அவர் அருகிலுள்ள கட்டிடத்தின் நான்கு அடி உயர சுவரைத் தாண்டி குதித்து கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார்.

சைஃப் அலிகானை தாக்கியவர் எதையும் திருடவில்லை.... கரீனா கபூர் வாக்குமூலம்!

ஷரிஃபால் சத்குரு ஷரன் கட்டடத்திற்குள் நுழைந்தபோது, ​​அங்கிருந்த காவலாளி சிறிது நேரம் தூங்கிக் கொண்டிருந்தார். 12 அடி உயரம் ஏற, ஷரிஃபுல் கட்டிட வளாகத்தில் கிடந்த ஏணியைப் பயன்படுத்தியுள்ளார்.பின்னர் அவர் குழாய்வழியாக ஏறியுள்ளார். கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள குழாய் புறா எச்சங்களால் மூடப்பட்டிருந்ததால், அவர் அதிலிருந்து இறங்கி அவசர படிக்கட்டு வழியாக 7வது மாடிக்கு ஏறினார்.அந்தக் காட்சிகள் ஆறாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஒரே சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.ஒருவேளை புறாக்களின் எச்சங்கள் இல்லையென்றால் அந்த பைப்பின் மூலமே தப்பித்து இருப்பான். இதனால் சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் சென்றிருப்பான். அப்படிச் சென்று இருந்தால் குற்றவாளியை அடையாளம் கண்டிருக்கவே முடியாது.

7வது மாடியில், குளியலறை ஜன்னல் வழியாக சைஃப் அலிகானின் பிளாட்டில் ஏற மீண்டும் குழாய்க்குள் நுழைந்துள்ளார்.ஜனவரி 16 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சத்குரு ஷரன் கட்டிடத்தில் உள்ள சைஃப் அலிகானின் வீட்டிலிருந்து தப்பிச் சென்ற பிறகு, அவர் முதல் தளத்திலிருந்து 12 அடி உயரத்திற்கு கீழே குதித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஏழாவது-எட்டாவது மாடிக்கு படிக்கட்டுகளில் ஏறி, பின்னர் குழாய் பகுதிக்குள் நுழைந்து, குழாயைப் பயன்படுத்தி 12 வது மாடிக்கு ஏறி, குளியலறை ஜன்னல் வழியாக சைஃப் அலிகானின் பிளாட்டுக்குள் நுழைந்தது தெரியவந்தது.பின்னர் குளியலறையிலிருந்து வெளியே வந்தார்.அப்போது சைஃப்பின் ஊழியர்கள் அவரைப் பார்த்து கூச்சல் போட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டில் இருந்த வீட்டு வேலைக்காரருடன் வாக்குவாதம் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு, சைஃப் அங்கு வந்து அவரை முன்னால் இருந்து பிடித்தார்.குற்றம் சாட்டப்பட்டவர் பயந்து சைஃப்பை முதுகில் குத்தியுள்ளார். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் உள்ளே சிக்கியிருப்பதாக நினைத்து சைஃப் பிளாட்டைப் பூட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் அவர் நுழைந்த அதே இடத்திலிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்.அவரது பையில் இருந்து சுத்தியல், ஸ்க்ரூடிரைவர், நைலான் கயிறு மற்றும் பிற பொருட்களை மீட்டுள்ளோம்” என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சைஃப் அலி கானை அவரது வீட்டில் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஷரிஃபுல், தானேயில் கைது செய்யப்பட்டார். அவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்.அவரது வயது 30.திருட்டு நோக்கத்துடன் அந்த நபர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு வந்த பிறகு, முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷாஜாத் என்ற தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக்கொண்டார்.

MUST READ