spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநான் ஒரிஜினல் வில்லன்டா..! சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்… போலீஸுக்கே சவால் விடும் நிஜ...

நான் ஒரிஜினல் வில்லன்டா..! சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்… போலீஸுக்கே சவால் விடும் நிஜ குற்றவாளி..!

-

- Advertisement -
kadalkanni

சைஃப் அலி கானின் வீட்டைத் தாக்கிய சந்தேக நபரை மும்பை காவல்துறை கடந்த 2 நாட்களாக சல்லடை போட்டு தேடி வருகிறது. இந்நிலையில், புதிய சிசிடிவி காட்சிகளில், கத்திக்குத்து சம்பவத்திற்குப் பிறகு மர்ம நபர் வேறு சட்டை அணிந்திருப்பதைக் காட்டுகிறது. தாக்குதல் நடந்து 48 மணி நேரத்திற்குப் பிறகும் அவர் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்.தாக்குதல் நடத்தியவர் பாதுகாப்பான அடுக்குமாடி குடியிருப்பில் எப்படி நுழைந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் முக்கிய குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.

நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதலில் பல தடயங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளதாகவும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். உள்துறை பொறுப்பையும் வகிக்கும் ஃபட்னாவிஸ், ”காவல்துறை விசாரணை நடந்து வருவதாகவும், அவர்களிடம் பல தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், காவல்துறை குற்றவாளியை மிக விரைவில் கண்டுபிடிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றும் கூறினார்.

மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”தச்சர் வாரிஸ் அலி சல்மானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விசாரணைக்காக பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏனென்றால் அவரது தோற்றம் ஊடுருவும் நபரைப் போலவே இருக்கிறது. வியாழக்கிழமை வெளியான சிசிடிவி காட்சிகளில் தாக்குதல் நடத்தியவரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. வீடியோவில், அதிகாலை 2:30 மணியளவில், தாக்குதல் நடத்தியவர், சிவப்பு நிற ஸ்கார்ஃப் அணிந்து, ஒரு பையை ஏந்தியபடி, சைஃப் அலிகான் வசிக்கும் ‘சத்குரு ஷரன்’ அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து படிக்கட்டுகளில் இருந்து கீழே ஓடுவதைக் காண முடிந்தது.


சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சல்மானி நடிகரின் பிளாட்டில் பணிபுரிந்தார். வேலைகளை மேற்கொண்டு வந்த ஒப்பந்ததாரர், தாக்குதல் குறித்து தச்சருக்குத் தகவல் அளித்துள்ளார். பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, போலீசார் தன்னை தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார். பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி, விசாரணைக்காக பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நபருக்கு கான் மீதான தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடித்து பிடிக்க 30க்கும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவரின் வயது 35 முதல் 40 வயதுக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினார். மகாராஷ்டிராவின் உள்துறை இணையமைச்சர் யோகேஷ் கடம், இந்த சம்பவத்திற்கு திருட்டுதான் காரணம் என்று குறிப்பிட்டு, தாக்குதலில் எந்த பாதாள உலக கும்பலுக்கும் தொடர்பு இல்லை என்று திட்டவட்டமாக நிராகரித்தார்.வ்

MUST READ