பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மும்பை வீட்டிற்குள் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான சில நாட்களுக்குப் பிறகு, சத்தீஸ்கரில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 31 வயதான ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியா என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் துர்க் ரயில் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
“மும்பை காவல்துறையினரின் வழிகாட்டுதலின் பேரில் மும்பை-ஹவுரா ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸில் இருந்து சந்தேக நபர் பிடிபட்டதாக
ரயில்வே பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிற்பகல் 2 மணியளவில், ரயில் துர்க்கை அடைந்தபோது, பொதுப் பெட்டியில் அமர்ந்திருந்த சந்தேக நபர் இறக்கிவிடப்பட்டு உடனடியாகக் காவலில் வைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.மும்பை காவல்துறை சந்தேக நபரின் புகைப்படம், ரயில் எண், கோச் நம்பர் உள்ளிட்டவற்றை ரயில்வே பாதுகாப்புப் படைக்கு அனுப்பியது. அதன் பிறகு அவர் பிடிபட்டார். அவர் தற்போது ரயில்வே பாதுகாப்புப் படை காவலில் உள்ளார்.
சந்தேக நபரை வீடியோ அழைப்பு மூலம் மும்பை காவல்துறை அதிகாரிகளுடன் பேச வைத்தனர். கைது செய்யப்பட்ட நபர் சம்பவத்தில் தொடர்புடைய நபரா அல்லது வேறு வேறு நபரா என்பதை உறுதிப்படுத்த மும்பையில் இருந்து ஒரு தனிப்படை துர்க்கை நோக்கிச் செல்கிறது. அது இரவு 8 மணியளவில் துர்க்கை அடையும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த நபர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தார்.
விசாரித்தபோது, முதலில் நாக்பூருக்குச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் பிலாஸ்பூருக்குச் செல்வதாகக் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட பயணி சைஃப் அலிகான் மீது கத்திக் குத்து நடத்திய நபரைப் போல் உள்ளதாகவும் சிசிடிவி காட்சிகளில் அவர் எடுத்துச் சென்ற அதே பையை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
நேற்று, போலீசார் விசாரணைக்காக ஒருவரை தடுத்து வைத்த பிறகு தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டதாக சில தகவல்கள் தெரிவித்தன. இருப்பினும், ஒரு அதிகாரி இதனை சம்பந்தப்பட்ட நபர் ஒரு தச்சர் என்றும், கத்திக்குத்து சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகரின் வீட்டில் பணிபுரிந்ததாகவும் கூறினார்.
தாக்குதல் நடத்தியவரைக் கண்டுபிடித்து பிடிக்க 30க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா உள்துறை இணையமைச்சர் (நகர்ப்புற) யோகேஷ் கடம், இந்த சம்பவத்திற்குப் பின்னால் கொள்ளை நோக்கம் இருப்பதாகக் கூறினார். கத்தித் தாக்குதலில் எந்த நிழல் உலக கும்பலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.