வின்டேஸ் பாலிவுட் காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சைஃப் அலிகான். தீபிகா படுகோன், கரீனா கபூர் உள்பட முன்னணி நடிகைகள் அனைவருடன் அவர் இணைந்து நடித்துள்ளார். முதல் திருமணம் தோல்வியில் முடிய கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கரீனா கபூரையே அவர் திருமணம் முடித்துக் கொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதே சமயம், அவரது முதல் மனைவியின் மகள் சாரா அலிகானும் பாலிவுட்டில் முன்னனி நடிகையாக உள்ளார்.
ஹீரோவாக நடித்து வந்த அவர் சினிமாவிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார். அதையடுத்து அவர் வில்லன் வேடத்தில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார். தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
Wife Kareena in Saif 's support as he returns post surgery 🫶🏻♥ #saifreena #saifalikhan #kareenakapoor #KareenaKapoorKhan pic.twitter.com/o6IFuzJGcD
— 01_Assinet (@SSaifeena) January 23, 2024