Homeசெய்திகள்சினிமாபிரபல தனியார் ஊடகத்திற்கு எச்சரிக்கை விடுத்த சாய்பல்லவி!

பிரபல தனியார் ஊடகத்திற்கு எச்சரிக்கை விடுத்த சாய்பல்லவி!

-

நடிகை சாய் பல்லவி பிரபல தனியார் ஊடகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சராக மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். பிரபல தனியார் ஊடகத்திற்கு எச்சரிக்கை விடுத்த சாய்பல்லவி!அதைத் தொடர்ந்து இவர் தமிழ் மொழியில் தனுஷ் உடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்த என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றுள்ளார். முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமான இந்த படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவியின் நடிப்பு இன்றுவரையிலும் பேசப்படுகிறது. இதற்கிடையில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் சாய் பல்லவி. அதன்படி ராமாயணா என்ற திரைப்படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படமானது 2026 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றில் சாய் பல்லவி, ராமாயணம் படத்தில் நடித்து முடிக்கும் வரை அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள மாட்டார் எனவும் அதுவரை ஹோட்டலில் சாப்பிடாமல் வெளியூர்களுக்கு செல்லும்போது தன்னுடன் சமையல்காரர்களை அழைத்துச் செல்கிறார் எனவும் அவர்கள் தான் சைவ உணவுகளை சமைத்துக் கொடுக்கிறார்கள் எனவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து நடிகை சாய் பல்லவி தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த செய்தியை குறிப்பிட்டு, “பெரும்பாலான நேரங்களில் கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் அடிப்படை இல்லாத வதந்திகள், பொய்கள், தவறான அறிக்கைகள் ஆகியவை உள்நோக்கத்துடன் அல்லது இல்லாமல் (கடவுளுக்கு தெரியும்) பரப்பப்படுவதை காணும் போது நான் அமைதியாக தான் இருக்கிறேன். ஆனால் அது தொடர்ந்து நடக்கும்போது நான் எதிர்வினையாற்ற வேண்டி இருக்கிறது. குறிப்பாக என்னுடைய படங்களின் வெளியீடுகள் அறிவிப்புகள் வெளியாகும் சமயத்தில் இதுபோன்று நடக்கிறது. அடுத்த முறை நான் எந்த ஒரு புகழ்பெற்ற ஊடகம் அல்லது தனி நபர் செய்தி அல்லது கிசுகிசு என்ற பெயரில் கேவலமான கதையை பரப்புவதைக் கண்டால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ