Homeசெய்திகள்சினிமாவிவாகரத்து குறித்து சாய்ரா பானுவின் அறிக்கை.... ஏ.ஆர். ரகுமானின் பதில் என்ன?

விவாகரத்து குறித்து சாய்ரா பானுவின் அறிக்கை…. ஏ.ஆர். ரகுமானின் பதில் என்ன?

-

உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசைப்புயல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். இவர் தனது தனித்துவமான இசையினால் ஆஸ்கர் விருது, தேசிய விருது என பல விருதுகளை அள்ளியுள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு விவாகரத்து ..... அதிர்ச்சியில் ரசிகர்கள்! இவ்வாறு திரும்பிய பக்கமெல்லாம் ஏ.ஆர். ரகுமானை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வரும் நிலையில் ஏ ஆர் ரகுமானின் விவாகரத்து குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு விவாகரத்துக் குறித்து அவரது வழக்கறிஞர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஏ ஆர் ரகுமானுடன் பல வருடங்களாக மண வாழ்வில் இருந்த சாய்ரா பானு, தனது கணவர் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து பிரிகின்ற கனமான முடிவை எடுத்திருக்கிறார். இந்த முடிவு இருவரின் உறவில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரச்சினையால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதும் தம்பதிகளுக்கு இடையில் நிலவிய பதற்றமும் சிரமங்களும் அவர்களுக்கு இடையில் சேர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது என்பதை உணர்ந்து, அதை இனி எதைக் கொண்டும் இணைக்க முடியாது என்று முடிவு செய்துள்ளனர். எனவே சாய்ரா பானு, வலி மற்றும் வேதனையுடன் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்த நேரத்தில் அவரின் விவாகரத்து முடிவிற்கு பிரைவசியை வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நாங்கள் முப்பது வருடத்தை எட்டி விடுவோம் என்று நம்பி இருந்தோம். ஆனால் எல்லாம் கண்ணுக்குத் தெரியாத முடிவை கொண்டிருப்பதாக தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கணத்தில் நடுங்கக்கூடும். இந்த சிதைவில், இன்னும் சில துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அர்த்தத்தை தேடுகிறோம். எங்கள் நண்பர்களுக்கு இந்த பலவீனமான அத்தியாயத்தை கடந்து செல்லும்போது உங்கள் கருணைக்கும் எங்கள் தனி உரிமைக்கு மதிப்பளித்ததற்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ