Homeசெய்திகள்சினிமாஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் 'சலார் 2' படப்பிடிப்பு..... லேட்டஸ்ட் அப்டேட்!

ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் ‘சலார் 2’ படப்பிடிப்பு….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் கல்கி 2898AD. அதாவது இந்த படம் உலகம் முழுவதும் 700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் 'சலார் 2' படப்பிடிப்பு..... லேட்டஸ்ட் அப்டேட்!அதேசமயம் பிரபாஸ் ராஜாசாப், ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் சலார் திரைப்படம் வெளியானது. கே ஜி எஃப் 1 மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் பிரபாஸ் தவிர பிரித்விராஜ், பாபி சிம்ஹா, ஸ்ரியா ரெட்டி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் 'சலார் 2' படப்பிடிப்பு..... லேட்டஸ்ட் அப்டேட்!சலார் முதல் பாகமாக வெளியான இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கிட்டத்தட்ட 600 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து பிரசாந்த் நீல், சலார் 2 – சௌர்யங்க பர்வம் படத்தை இயக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி இந்த படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இணைந்துள்ளதாகவும் தகவல் கசிந்தன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதமே தொடங்க இருக்கிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போக தற்போது சலார் 2 பட முதற்கட்ட படப்பிடிப்பு 2024 ஆகஸ்ட் மாதம் 2ஆம் ஐதராபாத்தில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் 'சலார் 2' படப்பிடிப்பு..... லேட்டஸ்ட் அப்டேட்!மேலும் அங்கு 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே 20 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் சலார் 2 படம் தொடர்பான அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ