Homeசெய்திகள்சினிமாசூறாவளியாய் 300 கோடி வசூலை நெருங்கும் 'சலார்'.... லேட்டஸ்ட் அப்டேட்!

சூறாவளியாய் 300 கோடி வசூலை நெருங்கும் ‘சலார்’…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

சூறாவளியாய் 300 கோடி வசூலை நெருங்கும் 'சலார்'.... லேட்டஸ்ட் அப்டேட்!பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சலார். யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் படங்களின் மூலம் ஆயிரம் கோடி வசூலை தொட்ட பிரசாந்த் நீல் இயக்கியிருந்த சலாம் திரைப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரின் கூட்டணியில் வெளியான இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், பாபி சிம்ஹா, ஸ்ரேயா ரெட்டி, மைம் கோபி, ஜான் விஜய் போன்றோரும் நடித்திருந்தனர். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார்.

இரு உயிர் நண்பர்களுக்கும் பரம எதிரிகளாக இவ்வாறு மாறுகின்றனர் என்பதன் பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. நடிகர் பிரபாஸுக்கு ஆதிபுரூஷ் போன்ற படங்களின் தோல்விக்கு பிறகு இந்த படம் சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது. மேலும் ஆக்ஷன் காட்சிகளிலும் தூள் கிளப்பியுள்ளார் பிரபாஸ். சில காட்சிகள் கே ஜி எஃப் படங்களை நினைவு படுத்துவது போல் இருந்தாலும் பல காட்சிகளுக்கு கைத்தட்டல்களும் விசில்களும் பறக்கின்றன. இந்நிலையில் முதல் நாளில் 178 கோடி வசூலை கடந்த சலார் திரைப்படம் இரண்டாவது நாளில் 295.7 கோடி ரூபாயை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சூறாவளியாய் 300 கோடி வசூலை நெருங்கும் சலார்.... லேட்டஸ்ட் அப்டேட்!

இந்நிலையில் பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாசும் கே ஜி எஃப் படங்களுக்கு பிறகு பிரசாந்த் நீலும் சலார் படத்தின் மூலம் விரைவில் ஆயிரம் கோடியை கடந்து சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படம் இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ