Homeசெய்திகள்சினிமாஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சி கோலாகலம்... கலக்கிய டாப் பாலிவுட் நட்சத்திரங்கள்...

ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சி கோலாகலம்… கலக்கிய டாப் பாலிவுட் நட்சத்திரங்கள்…

-

- Advertisement -
மூன்று நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற அம்பானி வீட்டு திருமண விழாவில், டாப் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று நடனம் ஆடிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்தியாவின் மாபெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கும், மகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில், தற்போது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற உள்ளது. ஆனந்த் அம்பானிக்கும், தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் திருமண நிச்சயம் முடிந்தது. நிச்சயதார்த்தமே வெகு விமரிசையாக கோலாகலமாக நடைபெற்றது. இருவரின் திருமணமும் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

இதையொட்டில் குரஜாத் மாநிலம் ஜாம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருமணத்திற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ஜாம் நகரில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் ஜாம் நகரில் அம்பானி வீட்டு திருமண விழாவை முன்னிட்டு சுமார் 50 ஆயிரம் பேருக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து விருந்து போடப்பட்டது. ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சண்ட்டும் இணைந்து பொதுமக்களுக்கு விருந்து பரிமாறினர். இந்நிலையில், திருமணத்தை ஒட்டி ஜாம் நகரில் 3 நாள் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இதில் தென்னிந்தியா முதல் பாலிவுட் வரை அனைத்து டாப் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது பாலிவுட்டின் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் ஷாருக்கான் , அமீர்கான்,மற்றும் சல்மான்கான் ஆகிய மூவரும் மேடையில் நடனமாடி அசத்தினர். அவர்களுடன் சேர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணும் நடனமாடினார். இந்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ