ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK23 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ ஆர் முருகதாஸ் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அத்துடன் படமானது 2025 ரம்ஜான் தினத்தை முன்னிட்டு திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும் படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், சத்யராஜ் ஆகிய மூவரும் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது . தற்போது இதன் கூடுதல் தகவலாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் 18ஆம் தேதி மும்பையில் தொடங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன. மேலும் இந்த படமானது ஏ ஆர் முருகதாஸின் முந்தைய படங்களைப் போலவே ஆக்சன் காட்சிகள் நிறைந்த சோசியல் மெசேஜை சொல்லக்கூடிய ஒரு படமாக உருவாகும் என்று நம்பப்படுகிறது.