Homeசெய்திகள்சினிமாசல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர்... ராஷ்மிகாவுக்கு போட்டியாக களமிறங்கிய பாலிவுட் பிரபலம்... சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர்… ராஷ்மிகாவுக்கு போட்டியாக களமிறங்கிய பாலிவுட் பிரபலம்…
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் இயக்குநர் முருகதாஸ். அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த ரமணா படதை இயக்கினார். இப்படம் கோலிவுட் திரையுலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக உருவெடுத்து விஜய், சூர்யா, மகேஷ் பாபு, உள்ளிட்டோரை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்தியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் புதிய படம் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு சிக்கந்தர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் தொடங்குகிறது.

இத்திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகர்கள் அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் வில்லன்களாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், சிக்கந்தர் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் இணைவதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.