Homeசெய்திகள்சினிமாசமந்தா திரைக்கு அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவு... வாழ்த்து கூறும் பிரபலங்கள்...

சமந்தா திரைக்கு அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவு… வாழ்த்து கூறும் பிரபலங்கள்…

-

சமந்தா திரையுலகில் அறிமுகமாகி 14 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, படத்திற்கு திரை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

சாம்… தமிழ் சினிமாவின் செல்ல சாமாக வலம் வரும் சமந்தா, திரையுலகில் நுழைந்து 12 ஆண்டுகள் கடந்தும் ஸ்டார் நாயகியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 90-களில் தமிழ் தெரியாத தமிழ்ப்பட நடிகைகளுக்கு மத்தியில், சென்னை பெண்ணாக களமிறங்கிய சமந்தா, இன்று தமிழ் ரசிகர்களின் செல்ல சாமாக கொண்டாடப்பட்டு வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. `மாஸ்கோவின் காவேரி’ படம் மூலம் கதாநாயகியான சமந்தா, அடுத்து `பாணா காத்தாடி’ மூலம் `யாருப்பா இந்தப் பொண்ணு?’ என திரும்பிப் பார்க்க வைத்தார்.

 

க்யூட் சிரிப்பும், குழந்தை முகமுமாய் சமந்தா மட்டுமல்ல அவர் ஏற்று நடித்த, ஜெஸ்ஸி, நித்யா, வேம்பு போன்ற கதாபாத்திரங்களும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தன. நீதானே என் பொன்வசந்தம் படத்தில், பள்ளிச் சீருடை… குதிரைவால் முடி.. குறும்புக்கண்கள்….யதார்த்த சிரிப்பு… என நித்யா வேடத்தில் ரசிகர்களை கவர்ந்திழுந்தார் சமந்தா. ராஜமௌலி இயக்கத்தில் நான் ஈ படம், சமந்தாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. நான் ஈ படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடிக்க, ஈ -யின் காதலியான சமந்தாவும் எனர்ஜிடிக் ஹீரோயினாக ஹிட் கொடுக்கத் தொடங்கினார்.

சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்த சமந்தா விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் என அடுத்தடுத்து மூன்று படங்களில் ஜோடி சேர்ந்தார். சிம்ரன், த்ரிஷா வரிசையில் விஜய்யுடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நடிகையாக, விஜய் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ளார். ஹூரோக்களுக்கு ஜோடியாக மட்டுமன்றி யூ டர்ன், ஓ பேபி திரைப்படங்களில் ஹூரோயினிசமும் காட்டியிருப்பார் சாம். நொடிக்கு நூறு முறை பழமொழி சொல்லும் பாட்டியாகவும், குட்டி குட்டி ரியாக்சனில் கட்டியிழுக்கும் சுட்டிப் பெண்ணாகவும், ஓ பேபி திரைப்படத்தில் கியூட் பேபியாக ரசிகர்களை கவர்ந்தார் சமந்தா.

வழக்கமான படங்களை போல அல்லாமல், யூ டர்னில், சிரிப்பு, பயம், சோகம் என காட்சிக்குக் காட்சி உணர்ச்சிகளை மாற்றி தனியொரு ஆளாக கதையை தாங்கி பிடித்து வெற்றி கண்டார் சமந்தா. காதல், காமெடி, திகில், ஆக்சன் என பல படங்களில் நடித்துள்ள சமந்தா, தனது திரைப்பயணத்தில் முதன்முதலாக, புஷ்பா படத்தில் ஒரு பட பாடலுக்கு நடனமாடி பட்டிதொட்டி எங்கும் கொண்டாடப்பட்டார். சென்னை மாடலில் தொடங்கி, செல்ல நாயகியான சமந்தா, தமிழ், தெலுங்கு என இருமொழி ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்.

MUST READ