Homeசெய்திகள்சினிமாபுஷ்பா பட பாடலுக்கு பயத்துடன் நடனமாடிய சமந்தா!

புஷ்பா பட பாடலுக்கு பயத்துடன் நடனமாடிய சமந்தா!

-

- Advertisement -

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பான் இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் புஷ்பா.புஷ்பா பட பாடலுக்கு பயத்துடன் நடனமாடிய சமந்தா! புஷ்பா தி ரூல் என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டின் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. புஷ்பா 1 படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருந்தன. குறிப்பாக சமந்தா நடனமாடிய ‘ஊ சொல்றியா‘ பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தது. மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் தெரிய சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இயங்கி வருவது மட்டுமல்லாமல் படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதே சமயம் இவர் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். புஷ்பா பட பாடலுக்கு பயத்துடன் நடனமாடிய சமந்தா!இந்நிலையில் தான் ஊ சொல்றியா பாடலில் ஆடும் பொழுது முதல் ஷாட்டில் தனக்கு மிகவும் பயமாக இருந்தது என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் இந்த அளவுக்கு கவர்ச்சியான பாடலில் சமந்தா நடிக்கவில்லை. முதல் முறையாக ஊ சொல்றியா பாடலுக்காகத்தான் கவர்ச்சி நடனம் ஆடியதால் அது புது அனுபவமாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். அந்தப் பாடலில் நடித்ததன் மூலம் மேலும் சில அனுபவங்களை தான் கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

MUST READ