சமந்தாவா இது?…. மாறுபட்ட தோற்றத்தில் சமந்தா புகைப்படங்கள் வைரல்…
- Advertisement -
பிரபல பத்திரிகைக்காக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சமந்தா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகம் மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து அவர் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா நடிக்காவிட்டாலும், இன்ஸ்டா மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் வௌியிட்டு ஆக்டிவாக உள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, அது தொடர்பாக தன் அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். தற்போது, உடல்நலம் தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். விரைவில் சினிமாவில் கம்பேக் கொடுக்கவும் அவர் தயாராகி உள்ளார். நடிகை சமந்தா ஹாலிவுட்டில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவரால் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், அப்படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நடிப்பைத் தாண்டி மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகை சமந்தா. தனது கல்லூரி நாட்கள் முதலே அவர் மாடலிங்கில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், பிரபல ஃபெமினா இதழ் ஒன்றின் அட்டைப் படத்திற்கு நடிகை சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மாறுபட்ட தோற்றத்திலும், மேக்கப்பிலும் அவர் உள்ளார்.