Homeசெய்திகள்சினிமாநடிகை சமந்தாவின் தந்தை காலமானார்.... ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்!

நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்…. ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்!

-

- Advertisement -

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமானார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அந்த வகையில் இவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலிக்க திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களிலேயே இவர்களின் திருமண உறவு முடிவுக்கு வந்தது.
நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்.... ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்!அதே சமயம் சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சினிமாவில் இருந்து சில நாட்கள் விலகி இருந்தார். தற்போது மீண்டும் பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல் நலக்குறைவு காரணமாக இன்று (நவம்பர் 29) திடீரென உயிரிழந்துள்ளார். சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தெலுங்கு ஆங்கிலோ இந்தியன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையின் மறைவால் மனம் உடைந்து போன சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் “மீண்டும் நாம் சந்திக்கும் வரை” என்று உடைந்த ஹார்ட் இமோஜியுடன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்.... ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்!இதனால் ரசிகர்கள் பலரும் சமந்தாவிற்கு தங்களின் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திரை பிரபலங்களும் நண்பர்களும் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபுவின் மறைவிற்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ