தெலுங்கில் வெங்கி மாமா, அந்தாக்கு மிஞ்சி உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதிய சிவபிரசாத் யானாலா ‘விமானம்’ என்ற படத்தில் மூலம் தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மீரா ஜாஸ்மின் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விமானத்தில் செல்ல வேண்டும் என்று கனவு காணும் தந்தை மற்றும் அவரது மகனைச் சுற்றி சுழலும் மனதைத் தொடும் படமாக இப்படம் என்று இயக்குனர் தெரிவிக்கிறார்.
புஷ்பா படத்தில் இளம் அல்லு அர்ஜுனாக நடித்த குழந்தை நடிகர் மாஸ்டர் துருவன், சமுத்திரக்கனியின் மகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரனும் இந்தப் படத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படம் குறித்து பேசிய இயக்குனர் “4 ஆண்டுகளுக்கு முன்பு, நான் விமான நிலையத்திற்கு அருகில் வசித்து வந்தேன். அப்போது 4 வயதாக இருந்த எனது மகனும், நானும் தினமும் விமான நிலையத்தின் சுவர் அருகே சென்று விமானங்கள் தரையிறங்குவதையும், புறப்படுவதையும் பார்த்துக் கொண்டிருப்போம். என் மகன் அதை பார்ப்பதை மிகவும் விரும்பினான், விமானத்தில் செல்ல விரும்புவதாக எப்போதும் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பான். நீ வளர்ந்ததும் போகலாம்னு சொன்னேன். ஆனால் அடுத்த சில நாட்களில் போகணும்னு சொன்னான். நான் விமானத்தில் சென்றதே இல்லை என்று சொன்னேன். இந்த உரையாடல் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மகனுடன் ஒரு தந்தையைப் பற்றிய ஒரு யோசனையை எனக்கு அளித்தது.
படத்தின் சில காட்சிகள் எனது நிஜ வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டவை. இருப்பினும், இந்த அதை நான் சினிமா வழியில் நடத்தியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எனக்கு ஒரு நல்ல நடிகர் கருமையான தோற்றத்தில் வேண்டும் என்று விரும்பினேன். வேலையில்லா பட்டதாரி மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் சமுத்திரக்கனியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மேலும் அவர் பொருத்தமாக இருப்பார் என்று உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்